கொரொனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற உதவி பேராசிரியர்..!
செங்கல்பட்டு மாவட்டம் நெமிலி சேரியில் ஓய்வுபெற்ற உதவி பேராசிரியர் கொரொனா தனக்கு வந்துவிடுமோ என அஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமமூர்த்தி என்பவர் சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கொரொனா வந்துவிடுமோ என அஞ்சி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த 30 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.






