--- --:--:-- --

திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

1.1

னியார் கட்டுமான நிறுவன உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வருண் மீது கிண்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் வருண்மணியன்.

 

சென்னை நந்தனத்தில் இருக்கக்கூடிய ரேடியஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் புகார் கூறியுள்ளார்.

 

அதில் வருண் மணியனிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து இரு பிளாட்டுகளை முன் பதிவு செய்ததாகவும் வீடுகளை தராமலும் பணத்தை தராமல் மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

 

இது தொடர்பாக விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளரை வருண்மணியன் ஒருமையில் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon