--- --:--:-- --

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

8

மிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon