சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்க மஞ்சள் நிற வீடு..!ரசிகருக்கு நன்றி தெரிவித்த தோனி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகரை மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீட்டையே மஞ்சள் நிற வண்ணத்தில் மாற்றுவது என்பது சாதாரண காரியம் இல்லை என்று கூறியுள்ளார்.
ரசிகர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் இணைந்து எடுத்துள்ள இந்த செயல் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு விட்டு பின்னர் மாற்றுவதை போல இதனை செய்ய முடியாது என்றும் தோனி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் அறங்கூரில் வசிக்கும் கோபிகிருஷ்ணன் தோனியின் பெரும் ரசிகர். அவர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன் தமது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் படம் வரைந்து வரைந்து மஞ்சள் வர்ணம் தீட்டி இருந்தார்.






