--- --:--:-- --

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

5

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

தமிழகத்தில் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பொது இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வருகிற 19ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் நாளை அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon