நாய்க்கு மயக்க பிஸ்கெட் கொடுத்துவிட்டு 10 சவரன் நகை கொள்ளை..!
பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் நாய்களுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து 10 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த செல்ல பிள்ளை என்பவர் தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த துணிகள் களைந்து விட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விவசாயி மூன்று நாய்களை வளர்த்து வந்த நிலையில் அவர்களுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.






