--- --:--:-- --

திருச்சியில் அடுத்தடுத்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்..!

8

திருச்சி அருகே இளம்பெண்களை ஏமாற்றி அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து கொண்டதாக காவலரின் மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான். கைபேசியில் இருந்த புகைப்படங்களால் நான்காவது மனைவியிடம் சிக்கியவன் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

 

திருச்சியில் ஆயுதப்படை காவலர் ஆன மகாலிங்கம் என்பவரது மகன் கார்த்திக். தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சுமதி என்பவரை கைபேசியில் பேசி காதலித்த கார்த்தி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். எலக்ட்ரானிக் கடை மேலாளரான இவர் திருவரம்பூரில் சுமதியுடன் வசித்து வந்துள்ளார்.

 

அவ்வப்போது வெளியூர் சென்று வந்ததாலும் கைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்ததாலும் சுமதி கார்த்திக் மீது சந்தேகப்பட்டு உள்ளார். கார்த்திக்கின் கைபேசியை பார்த்த சுமதி அதில் பல பெண்களுடன் கார்த்திக் இந்தப் புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்து போனார். இதுபற்றி கேட்டபோது சுமதியை அடித்து உதைத்துள்ளார்.

 

இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா, சென்னையை சேர்ந்த வானிநீலா மற்றும் மீனா என ஏற்கனவே மூன்று பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டு அவர்களின் நகைகளை விற்று ஆடம்பரமாக இருந்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.

 

மேலும் சில பெண்களை தனது வலையில் வீழ்த்த கைபேசியில் பேசி வந்ததாகவும் கூறியுள்ளார். கார்த்திகை கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நான்காவது மனைவியான சுமதியை முதன்முறையாக தனது நண்பருக்காக பெண் பார்க்க சென்ற போது தான் சந்தித்துள்ளார் கார்த்திக். கைபேசியில் பேசிப்பேசியே சுமதியை மனைவி ஆக்கியுள்ளார் இந்த லால்குடி மன் மதன் கார்த்திக்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon