--- --:--:-- --

கோவை சின்ன தடாகத்தில் மண் கடத்தல் – பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல். உரிமையாளர் மீது வழக்குப்பதிவு !!!

5

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் மகேஷ்வரி. இவருக்கு சின்னதடாகம் பகுதியில் 3½ ஏக்கர் பூமி உள்ளது. இவரது பூமியில் யாரோ மண் திருடுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவரது மகன் கர்ணன் உடனடியாக அங்கு சென்றார். அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் எடுத்து கொண்டு இருந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவை வடக்கு தாசில்தாருக்கு மகேஷ்வரி போன் மூலம் தகவல் தந்தார்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தடாகம் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்கள் தப்பித்து ஓடினர். இதுகுறித்து மகேஷ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் லாரி உரிமையாளர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி மற்றும், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 நாட்களாகவே இந்த பூமியில் இரவு, பகல் பாராமல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon