மாமியாரை தாக்கிய மருமகள்..! சிசிடிவியில் சிக்கிய காட்சி..!
ஹைதராபாத்தில் குடும்ப தகராறில் மாமியாரை மருமகள் தாக்கிய சம்பவத்தைத் சிறுவன் ஒருவன் சுற்றிச் சுழன்று வீடியோ எடுத்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு ஒன்றில் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சற்று வயதான மாமியாரை குடும்ப தகராறில் அந்தப் பெண்ணின் தாயாரும் சேர்ந்து கொண்டு அவரை கடுமையாக தாக்கினார்.
அந்தப் பெண்மணியை யாரும் காப்பாற்ற முன் வராத நிலையில் சிறுவன் ஒருவன் மொபைல் போனில் அங்குமிங்கும் சுற்றி சுழன்று படம் பிடித்தான். காட்சிகள் அனைத்தும் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






