--- --:--:-- --

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிப்பு: திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

df

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததைத் தொடர்ந்து திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

திருவாடனை நான்குமுக்கு சந்திப்பு சாலையில் அதிமுகவின் , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் செங்கைராஜன், தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியாராமு, நகர செயலாளர் பிச்சை முன்னிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததைத் தொடர்ந்து வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுகவின் அனைவரும் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக பாடுபடுவோம் உறுதி எடுத்துக்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon