--- --:--:-- --

கொரொனா விழிப்புணர்வுக்காக பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

1

கொரொனா தொடர்பாக நாடெங்குமுள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெரிய அளவிலான பரப்புரை இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். பொருளாதார மீட்சிக்காக பொது ஊடகத்தில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக பண்டிகை காலமும், குளிர் காலம் தொடங்க உள்ளதால் கொரொனா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துவது முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்த பரப்புரை இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon