செவிலியர் ஊசி போட்ட சில வினாடிகளில் தாய் உயிரிழந்ததாக மகன் குற்றச்சாட்டு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த தனது தாய் செவிலியர் ஊசி போட்ட சில வினாடிகளே தன் கண்முன்னே உயிரிழந்ததாக மகன் புகார் தெரிவித்துள்ளார்.

 

செம்மங்காலையை சேர்ந்த சந்த்ரிகா ரத்த சோகை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரொனா பாதித்து சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி இன்று மாலை வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் செவிலியர் ஊசி செலுத்திய சில விநாடிகளிலேயே சந்திரிகா உயிரிழந்ததாக அவர் மகன் கூறியுள்ளார்.

 

இதுபோன்ற மரணங்கள் அடிக்கடி நிகழ்வதாக செவிலியர் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.


Leave a Reply