தங்கம் தென்னரசுவின் தாயார் மறைவுக்கு அழகிரி அஞ்சலி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி நேற்று காலமானார்.

 

அருப்புக்கோட்டை அருகே வல்லாண்கிணறு கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி,தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 


Leave a Reply