வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திருவண்ணாமலை பெண் காவல் ஆய்வாளர் கவிதா மீது நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் அவரது கணவர் அருள்குமார் இருவரும் 10 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஷேக் முஸ்தபா புகார் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையம் பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முழுமையாக விசாரித்த மடிப்பாக்கம் ஆணையர் நீதிமன்றத்தில் விசாரணை குறித்து தாக்கல் செய்த பின்பு தற்போது காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் அவரின் கணவர் அருள்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


Leave a Reply