உ.பி.யில் பாலியல் வன்கொடுமையில் இளம்பெண் கொலை: நீதி கேட்டு ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்ற கனிமொழி எம்.பி.கைது!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


.பி யின் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் / கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற கனிமொழி எம்.பி., உள்ளிட்ட திமுக மகளிரணியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

 

உபி.யின் ஹாத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறக் கூட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி தர உ.பி.அரசு மறுப்பதால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த விவகாரத்தில் உ.பி.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹாத்ராஸ் செல்ல முயன்ற இவர்கள் மீது உ.பி.போலீசார் அடக்கு முறையை கையாண்டதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

கனிமொழி எம்.பி.கைது

 

இந்நிலையில் ஹாத்ராஸில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணுக்காக நீதி கேட்டு சென்னையில் திமுக மகளிரணி சார்பில், கனிமொழி எம்.பி. தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பேரணியில் தொடக்கத்தில் பேசிய கனிமொழி, உ.பி.யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாகவும், பசுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பெண்களின் பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை என குற்றம் சாட்டினார்.


Leave a Reply