ஹத்ராஸ் இளம்பெண் கொலை தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்ராஸ் இளம்பெண் கொலை தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

 

ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

 

ஹத்ராஸ் விவகாரத்தை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பின் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுக்கள் மீது கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

 

மேலும் இந்த விசாரணையை உத்திரப் பிரதேசத்திற்கு வெளிய மாற்ற வேண்டும் என்று வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.


Leave a Reply