அரிவாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அரிவாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள ரவுடிகள் பட்டா கத்தியால் பிறந்த நாள் கொண்டாடுவது போல சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அரிவாளுடன் பிறந்தநாள் கேக்கை வெட்டி உள்ளனர்.

 

காமராஜர் புரத்தை சேர்ந்த இளைஞர்கள் முனிஷ் குமார், விஜய பாரதி ஆகியோர் நள்ளிரவில் நண்பர்களுடன் கூரிய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிறந்தநாள் கேக் வெட்டி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

தமிழ்நாட்டில் பட்டாக்கத்தி மற்றும் வாலுடன் பிறந்த நாள் கேக் வெட்டும் கலாச்சாரம் ரவுடிகள் இடையே அதிகரித்திருப்பது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


Leave a Reply