மாந்த்ரீகம் செய்வதாக கூறி சுற்றிவந்த கும்பல்..! மடக்கிய ஊர் மக்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆட்டோவில் வீடு வீடாக சென்று மாந்தீரிகம் செய்வதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை பொது மக்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று அந்த வீட்டில் சூனியம் செய்வினை வைக்கப்பட்டுள்ளது என்று அச்சமூட்டி மோதிரம் போன்றவற்றை கொடுத்து 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அந்த கும்பல் பணம் வசூல் செய்துள்ளது.

 

சந்தேகம் கொண்ட அந்த ஊர் இளைஞர்கள் சிலர் 6 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மாந்திரீகர்கள் என்பது மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

 


Leave a Reply