வேலைக்கு சென்ற சிறுமி 3 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


றுமையின் காரணமாக வேலைக்கு சென்ற 16 வயது சிறுமியை உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இதற்கு பெண் ஒருவரும் உடந்தையாக இருந்தது கொடூரத்தின் உச்சம்.

 

நாகை மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக வேறு வழியின்றி அவ்வப்போது அவரது 16 வயது மகள் உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

 

சிறுமி தனியாக வந்து செல்வதை அறிந்த உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்கு ஆசைப்பட்ட அந்த சிறுமி வீட்டருகே வசிக்கும் துர்கா தேவி என்பவர் தான் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

 

ஆனால் நம்பிக்கையுடன் யாரிடம் இந்த தகவலை கூறினாரோ அவரே தனது வாழ்க்கையை புரட்டிப் போடுவார் என அந்த சிறுமி நினைத்துக்கூட பார்க்கவில்லை. சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட துர்காதேவி இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

 

சிறுமியின் நிலையை அறிந்த விஜயனும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த துர்கா தேவியின் கணவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

அடுத்தடுத்து மூன்றுபேர் பாலியல் வன் கொடுமை செய்ததால் அதிர்ச்சியில் உறைந்து போன அந்த சிறுமி வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதனையடுத்து காவல்துறையினர் சண்முகசுந்தரம், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த துர்கா தேவி ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Leave a Reply