2 மரக்கன்றுகளை நட்டு இணையத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை திரிஷாவும் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுமரக்கன்றுகளை நட்டுள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாளில் கிரீன் இண்டியா என்ற தலைப்பில் செடி ஒன்றை நட்டு நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சவால் விட்டிருந்தார்.

 

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய்யும் ஸ்ருதிஹாசனும் தனது இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு சவாலை நிறைவேற்றினர். இந்த நிலையில்தான் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்டு இன்று 2 மரக்கன்றுகளை நட்டுள்ளேன் என நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த சவாலில் உங்கள் பங்கையும் வழங்கி பசுமை இந்தியாவை உருவாக்க உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் நடிகை திரிஷா குறிப்பிட்டுள்ளார். பசுமை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிரீன் இந்தியா என்ற தலைப்பில் சவால் ஒன்றை உருவாக்கி பிரபலங்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.


Leave a Reply