வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளம்பெண்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வேலை வழங்குவதாகக் கூறி மதுரையை சேர்ந்த இலைஞரிடம் இளம்பெண் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ஆன்லைன் மூலம் வேலை தேடி வட எம்.காம் பட்டதாரி சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்ட இளம்பெண் இந்த மோசடியில் ஈடுபட்டார். வேலைக்கு செல்வதற்கு முன் குறிப்பிட்ட வங்கி கணக்கில் மேலும் 60 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு சந்தியா கூறியதால் சந்தேகமடைந்த ஸ்ரீனிவாசன் விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

 

இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞர் சீனிவாசன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

 


Leave a Reply