ஹத்ராஸ் சம்பவத்தில் ‘பாஜகவுக்கு இது கெட்ட பெயர்’ என விமர்சனம் செய்த உமாபாரதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்ராஸ் சம்பவத்தில் உத்திரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை மாநில அரசுக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்க்கும் பாரதிய ஜனதாக்கும் கெட்ட பெயரை பெற்றுத் தந்து இருப்பதாக அந்த கட்சியின் மூத்த தலைவரான உமாபாரதி விமர்சித்துள்ளார்.

 

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு ரிஷிகேஷில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் உமாபாரதி ஹத்ராஸ் குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டுவிட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமக்கு உடல்நலம் அடைந்த பின்னர் ஹத்ராஸ் சென்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் மூத்த சகோதரி என தம்மை உமாபாரதி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply