உலகின் மிக நீளமான “அடல்” சுரங்க பாதை திறப்பு.. பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மாச்சல பிரதேசம் – லடாக் இடையே மலையை குடைந்து 9.02 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட இந்த சுரங்கப்பாதை திட்டம் பல்வேறு தடைகளைத் தாண்டி நிறைவு பெற்றுள்ளது. ஹங்கேரி நாட்டின் தொழில் நுட்பத்துடன் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. ரோடாங் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் மலையைக் குடைந்து 9 02 கி.மீ. தூரத்துக்கு குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. |

 

17 அடி உயரமும் 10 மீ அகலமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை திறப்பின் மூலம் மணாலி-லே இடையே பயணதூரம் 46கிலோமீட்டர் குறையும். பயண நேரமும் 5மணி நேரம் வரை குறையும்.

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை என வரலாற்று சாதனையும் புகழும் படைத்துள்ள இந்த சுரங்கப்பாதையில், 3000 கார்கள், 1500 லாரிகள் செல்ல முடியும். இந்த சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


Leave a Reply