தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 8 மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அந்தமான் கடல் பகுதியில் வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply