சாதி மறுப்பு திருமணம்..! தாக்குதல் நடத்திய பெண் வீட்டார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் மீது பெண்ணின் வீட்டார் கடுமையாக தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஔவையார்பாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தன்னுடன் பணிபுரிந்த சௌந்தரநாயகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்தார்.

 

பின்னர் இருவரும் அசோக் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டிருப்பதாக உறவினர்கள் அழைத்துள்ளனர். இதனை நம்பிய அசோக் தனது மனைவி சகோதரர் பரணிதரன், நண்பர் சூரி ஆகியோருடன் பெண்ணின் தந்தையை பார்க்க காரில் சென்றனர்.

 

அங்கு சென்றதும் சௌந்தரநாயகியை வீட்டில் சிறை பிடித்த உறவினர்கள் அவரது கணவர் அசோக் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு கம்பு, கட்டை, கிரிக்கெட் மட்டையை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வந்த காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 

அங்கிருந்து தப்பிய வரும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எனவே தனது மனைவியை மீட்டு தரவேண்டும் எனவும் அந்த பெண்ணின் கணவர் அசோக் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply