பேஸ்புக்கில் வந்த ஆடை விளம்பரங்களை நம்பி ஏமாறும் பெண்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர் ஃபேஸ்புக்கில் வந்த ஆடைகள் குறித்த விளம்பரங்களுக்குள் சென்று தனக்கு பிடித்த ஆடைகளை பார்வையிட்டுள்ளார். சிறிது நேரத்தில் செல் என்றும் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டு ரக ரகமான ஏராளமான ஆடைகள் குறித்த விளம்பரங்கள் வந்துள்ளன.

 

குழுவில் தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற நபர் தன்னிடம் வளையல்கள், துணிகள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.

 

அந்த குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்ததால் இந்திரா பிரகாஷும் நம்பிக்கையோடு தனக்கு பிடித்த ஆடைகளை தேர்ந்தெடுத்து அதற்கான பணத்தை செலுத்தி உள்ளார்.

 

ஆனால் பணம் செலுத்திய சிறிது நேரத்தில் தனது எண் அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்ட விட்டதாகவும் அதில் உள்ள அட்மின் எண்ணுக்கு அழைத்தால் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி சைபர் கிரைம் போலீசில் இந்திரா பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

 

அதன்படி விசாரணையில் இறங்கிய போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். கூகுளில் இருந்து மீசோ போன்ற செயலிகளில் இருந்தும் சேலைகள் மற்றும் வளையல்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ராஜேந்திரன் தனியாக விளம்பரம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

 

அவனுடைய விளம்பரங்களை நம்பி வெளி மாநில பெண்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாய் முதல் ராஜேந்திரனின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது. பணம் அனுப்பிய சில மணி நேரங்களில் அந்தப் பெண்களின் எண்களை ராஜேந்திரன் பிளாக் செய்து விடுகிறார்.

 

அனுமதியின்றி தங்களுடைய செல்போன் எண்ணை குழுவில் இணைத்தது ஏன் என கேள்வி கேட்கும் பெண்களின் எண்களையும் உடனடியாக பிளாக் செய்து விடுவான் என்கின்றனர் போலீசார். இதுவரை அவனது மொபைலில் 700 பெண்களின் செல்போன் எண்கள் பிளாக் லிஸ்டில் உள்ளதாக அவர் கூறினார்.

 

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களுடைய செல்போன் எண்களை வெளிப்படையாக தெரியும் வண்ணம் வைத்திருக்கும் பெண்களே ராஜேந்திரனின் இலக்கு என்று கூறும் போலீசார் செல்போன் எண் உட்பட அனைத்து விபரங்களையும் லாக் செய்து வைப்பதே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர்.


Leave a Reply