தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின்… ஆனாலும் பெரும்பான்மை திமுக ஊராட்சி தலைவர்கள் “நோ ரெஸ்பான்ஸ்!!”

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


ன்று நடை பெற இருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில், அதனை மீறி திமுக ஊராட்சித் தலைவர்கள் தனியாக கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தும், அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லாமல் பிசுபிசுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தடையை மீறி மு.க.ஸ்டாலினும், பல்வேறு மாவட்டங்களில் ஒப்புக்கும் திமுக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

 

வழக்கமாக ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். பல ஆண்டுகளாகவே இந்த கிராம சபைக் கூட்டங்கள் வெற்று சம்பிரதாயமாகவே நடத்தப்ட்டு வந்தன. ஆனால் கிராமசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது.

 

மேலும் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று தலைவர், உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக கடந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பெருமளவில் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரும் தங்கள் கட்சியினரை தவறாமல் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க உத்தரவிட்டிருந்தனர். இதனால் கிராம சபைக் கூட்டங்கள் களை கட்டின. தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டன.

 

பின்னர் இந்தாண்டில் மே தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. தற்போதும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது போல், காந்தி ஜெயந்தி தினமான இன்று கிராமசபைக் கூட்டமும் நடத்த தமிழக அரசு அனுமதித்தது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி கிராமசபை கூட்டங்களை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களையும் அரசு அறிவித்திருந்தது.

 

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு

 

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்களில், மத்திய அரசின் புதிய வேளான் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் இது போல் அழைப்பு விடுத்ததுடன், ஜும் செயலி மூலம் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைகளில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் இன்று நடை பெற இருந்த கிராமசபை கூட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, தமிழக அரசின் கொரோனா தொடர்பான செலவுகள் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கொண்டு வர பலரும் தயாராகி வந்தனர்.

 

இந்நிலையில் தான் தமிழக அரசு நேற்றிரவு அவசரமாக பிறப்பித்த உத்தரவில் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு காரணம் கொரோனா நோய்த் தொற்று பரவல் சில மாவட்டங்களில் அதிகரித்துள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை பேரில் ரத்து என கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக வெளியான தகவல் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

 

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராமசபை கூட்டம் மூலம் வருமா?

 

கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்திருந்தார், அத்துடன் கிராமசபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்தாலும், திமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் தனியே கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

முகவூர் ஊராட்சியில் நடைபெற்ற சிராமசபைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பங்கேற்றார்
முகவூர் ஊராட்சியில் நடைபெற்ற சிராமசபைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பங்கேற்றார்

இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டங்கள் ஓரிரு இடங்களில் பெயரளவுக்கு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட முகவூர் ஊராட்சியில் நடைபெற்ற சிராமசபைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பங்கேற்றார்.

 

“மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்புக்கு நோ ரெஸ்பான்”

ஆனாலும் தமிழகத்தில் பெரும்பான்மை ஊராட்சிகளில் திமுகவைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்த போதும், மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி இன்று தனியாக கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் ஊராட்சியில் தலைவர் திமுகவைச் சேர்ந்தவராக இருந்த போதும், உறுப்பினர்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் வீண் வம்பு வேண்டாம் என கப்சிப் ஆகி விட்டதாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ஒருவர் உண்மையை போட்டுடைத்தார். ஆக மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்புக்கு நோ ரெஸ்பான்சாகி பிசுபிசுத்து விட்டது என்றே கூறலாம்.


Leave a Reply