அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர உத்தரவு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


க்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அந்தக் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 28ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 

அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி வருகிற 7ஆம் தேதி இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து  அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அக்டோபர் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply