தேசத்தந்தை மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு 5,000 மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.!

Publish by: எம்.மகேஸ்வரன் --- Photo :


சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு காவேரி கூக்குரல் சார்பாக 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார். காவிரி கூக்குரல் திட்டம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தன்னார்வலர்கள் முத்துகிருஷ்ணன், மாயன் மற்றும் ஜெகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply