நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்நாடு, வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற வைபவ் என்று சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.

 

அதில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று அறிவியல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்களை ஒருங்கிணைத்து இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டுமென கூறினார்.

 

மேலும் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கும் புத்தாக்க நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருவதாகவும் நாட்டில் நடைபெறும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சிகள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply