எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக மக்கள் அஞ்சலி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


றைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக மக்கள் இன்றும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி யின் உடல் பண்ணை வீடு அமைந்திருக்கும் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

கொரொனா பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக மக்கள் உள்ளே வந்து வெளியே செல்ல வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு நேற்றும் இன்றும் இரு தினங்களுக்கு மட்டும் பார்வையிட பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து எஸ் பி பி யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் வந்து எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர். பிரபல திரைப்பட நடிகர்களும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

இதனிடையே சனி ஞாயிறு ஆகிய நாட்களில் எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் வழக்கம்போல அஞ்சலி செலுத்தலாம் என பண்ணை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply