முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது சார்பில்  அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பொருட்களை வாங்கிகொள்ளலாம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதிலாக அவர்களது சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பொருட்களை வாங்கி செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் அனுப்பிய சுற்றறிக்கையில் வயது மூப்பு காரணமாக நியாய விலை கடை சென்று பொருட்களை வாங்க இயலாத அட்டைதாரர்கள் அதற்கான அங்கீகாரத்தை பூர்த்தி செய்து நியாய விலை கடை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட அட்டைக்காரர் சார்பில் உணவுப் பொருட்களை பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் விபரம் தவறாது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தவிர பிற குடும்ப அட்டைதாரர்கள் இந்த வசதியை தேர்வு செய்ய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகுதியுள்ள நபர் உணவுப் பொருட்களை பெறுவதற்கு அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ள ஆணையர் அங்கீகரிக்கப்பட்ட நபர் உணவுப் பொருட்களை பெறுவதற்கு யாருக்காக பொருள் வாங்க உள்ளாரோ அவர்களது குடும்ப அட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 


Leave a Reply