அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப் தனக்கும், மெலனியாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

வெள்ளை மாளிகையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். டிரம்ப்பின் உயர்மட்ட ஆலோசகர் ஹோப் ஹிக்சுக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

 

மேலும் அண்மையில் பிரச்சாரம் மற்றும் விவாத நிகழ்ச்சிகளுக்கு ஹோப் டிரம்புடன் சென்று இருந்தார். எனவே ஹோப், மெலனியா ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தாங்கள் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சார பணிகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப்பின் உதவியாளர்களுக்கும், பாதுகாவலர்களும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

அப்போது முதலே டிரம்ப்புக்கும் தொற்று ஏற்படாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


Leave a Reply