நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி..!
கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார் . 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படுகிறது. இதனிடையே பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக தேவசம்போர்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி 65 வயதுக்கு மேல் உள்ள பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறை ஒன்றும் இல்லை என்பதற்கான சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் நடைமுறை மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சபரிமலையில் தங்குவதற்கோ, பம்பை ஆற்றில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் வெளிமாநில பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.






