--- --:--:-- --

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் தற்கொலை..! காதலனனின் தந்தையை கொலை செய்த பெண்ணின் தந்தை..!

9

யிலாடுதுறை அருகே காதலை கண்டித்ததால் மகள் தற்கொலை செய்ததற்கு பழி தீர்க்க காதலனின் தந்தையை வெட்டிக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கபூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவியின் மகள் இலக்கியாவும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்த நிலையில் காதலை கண்டித்ததால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதற்குப் பழி தீர்க்க நினைத்த இலக்கியாவின் தந்தை ரவி நேற்றிரவு மகன் ஸ்ரீராம் மற்றும் உறவினர் சதீஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு கார்த்திக்கை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

அங்கு கார்த்திக் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது தந்தையை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon