வைகை அணையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது…!
மதுரை திண்டுக்கல் மாவட்டம் வேளாண் தேவைக்காக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் வைகை அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன.
அந்த மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையின்படி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வைகை அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, மதுரை ஆட்சியர் வினய், தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அங்கு நடைபெற்ற பூசைகளைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். அணையிலிருந்து வெளியேறிய நீரில் துணைமுதல்வர் உள்ளிட்டோர் மலர்தூவி வணங்கினார். அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும், அடுத்த 75 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.






