ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராக உள்ள நடிகர்கள் ஆர்யா, விஷால்..!
திரைப்படங்களின் படப்பிடிப்பிற்க்கு ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கொரொனா ஊரடங்கின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அண்மையில் அனுமதி வழங்கியதால் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ஷூட்டிங் தொடங்கி விட்டன. இதையடுத்து தமிழ் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பிற்கு தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் உடற் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த நடிகர்கள் தங்களை மீண்டும் ஆயத்தமாக உள்ளனர் அந்தவகையில் நடிகர்கள் ஆர்யா, விஷால் ஆகியோர் உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் ஆர்யா அடுத்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார். அதற்கான தீவிர பயிற்சியில் அவர் இறங்கியுள்ளார்.






