--- --:--:-- --

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை — கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு !!!

1.2

கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவையின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலத்தவர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கேரள மாநில மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

அன் றைக்கு அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்காது எனவும்,கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள்,அரசு பாதுகாப்பான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படு்ம் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளதால் செப்டம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக கருதி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon