திருமண மறுநாளே இளைஞர் உயிரிழந்த சம்பவம்..! கொலையா? தற்கொலையா? என விசாரணை..!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணமாகி ஒரே நாளில் புது மாப்பிள்ளையின் சடலம் வாணியாறு அணையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாரியம்பட்டியை சேர்ந்த சக்தி என்ற இளைஞருக்கும், பண்டாரஞ்செட்டிபட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை வாணியாறு அணை அருகே நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறிச்சென்ற சக்தி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி விட்டு தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சக்தியின் சடலத்தை அணையில் இருந்து மீட்டனர்.
சக்தி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.






