நாகர்கோவிலில் புதிய தேநீர் கடையை தூய்மை பணியாளர்களை கொண்டு திறக்க வைத்த கடை உரிமையாளர்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதிய தேநீர் கடையை தூய்மைப் பணியாளர்கள் திறந்துவைத்து உரிமையாளர்கள் கௌரவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த அஜித், முருகன் இருவரும் இணைந்து சொந்தமாக தேநீர் கடையை தொடங்கியுள்ளனர்.
பிரபலங்களை அழைத்துவந்து புதிய கடை திறப்பு விழா நடத்தப்படும் நிலையில் நண்பர்கள் இருவரும் இணைந்து கொரொனா முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்கள் மூலம் கடை திறப்பு விழாவை நடத்துகின்றனர். உரிமையாளர்களின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்கள் அவர்களை மனதார வாழ்த்தி உள்ளனர்.






