ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவன் ஹரிஹரன்.
ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் கன்னிவாடி அருகே உள்ள பண்ணை பட்டியில் குத்தகைக்கு தோட்டத்தை கவனித்து வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி தனது சொந்த ஊரான செம்பட்டி பாளையங்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஹரிஹரனுக்கு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






