ஐபிஎல் தொடரில் பங்கேற்க இன்று அமீரகம் செல்லும் சிஎஸ்கே அணி!
ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர். ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் முதற்கட்டமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பயிற்சியை முடித்துக்கொண்ட அவர்கள் தனி விமானம் மூலம் இன்று துபாய் புறப்படுகின்றனர். அங்கு வீரர்கள் ஆறு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வைக்கப்பட உள்ளனர்.
இதனிடையே கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கியுள்ள ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.






