--- --:--:-- --

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதம் வரை கோதுமை இலவசம்..!

11.1

தமிழகத்தில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் கோதுமையையும் நவம்பர் மாதம் வரை விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதா அன்னயோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமையை இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஒரு கிலோ இலவச கோதுமை வழங்கும் போது அதற்கு நிகரான இலவச அரிசியை குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான கோதுமையையும் சேர்த்து இந்த மாதம் 2 கிலோ கோதுமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதேசமயம் விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டும் கோதுமை வழங்கவும் மற்றவர்களுக்கு வழக்கம் போல அரிசி விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவசமாக கோதுமை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon