--- --:--:-- --

விரிக்ஷா சர்வதேசப் பள்ளியில் 74 ஆவது சுதந்திர தினவிழா..!

34

திருப்பூர், வீரபாண்டி பகுதியில் செயல்பட்டுவரும்  விரிக்ஷா சர்வதேசப்  பள்ளியில்  74 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.  விழாவுக்கு பள்ளித்தாளாளர்  ராஜலட்சுமி  தலைமை தாங்கி சுதந்திர தின கொண்டாடத்தின் அவசியத்தைப் பற்றி உரையாற்றினர். ஆங்கில ஆசிரியர் புவனேஷ், முன்னிலை வகித்தார். தமிழாசிரியை மோனிகா வரவேற்றார். பள்ளித்தலைவர் கோவிந்தராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

 

மாணவர்கள் வீட்டில் இருந்தே  வீடியோ மூலம் நிகழ்நிலையில் (Virtual) நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட  தலைவர்களைப் போல் வேடமிட்டு, அவர்களின் கருத்துக்களை உணர்வுப்பூவமாக பேசி வெளிப்படுத்தினர். முடிவில் அறிவியல் ஆசிரியர் கீர்த்தனா  நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி தேன்மொழி செய்து இருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon