மரக்கன்றை நட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்..!
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விடுத்த சவாலை ஏற்று நடிகை ஸ்ருதிஹாசன் தன் வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்துள்ளார். முன்னதாக தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் மகேஷ்பாபு நடிகர் விஜய், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு மரம் நடும் சவாலை விடுத்தார்.
நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்ததை தொடர்ந்து புதன்கிழமை ஸ்ருதிஹாசன் நட்டுள்ளார். மேலும் அவர் மரக்கன்று நடும் சவாலை தொடரும்படி பாகுபலி புகழ் ராணா ரகுபதி, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னாவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.






