தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இன்று 5,914 பேருக்கு தொற்று உறுதி…! மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!!
தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இன்று மட்டும் 5914 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவான நிலையில் மொத்த எண்ணிக்கை 3, 02,815 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்திற்கு கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு உறுதியாகியுள்ளது.எனவே, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்து 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து இன்றும் ஆயிரத்திற்கு கீழாக 976 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.சென்னையில் மட்டும் 1,10,121பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,037ஆகும். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,44,675 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து இது வரை பலி எண்ணிக்கை 5,041ஆக உயர்ந்து உள்ளது.
இது வரை, தமிழகம் முழுவதும் 31,74,849பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 65,141 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






