--- --:--:-- --

வெள்ளி அங்கி மற்றும் வேல் அரோகரா சத்தத்தில் முருக வழிபாடு !

22

கறுப்பர் கூட்டம் எனும் யூ-டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியதாக சர்ச்சை உருவாகியது. இதனை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் குவிந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா திருப்புவனத்தை அடுத்துள்ள தஞ்சாக்கூர் கிராமத்தில்உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரண்டு கிலோ மதிப்பிலான வெள்ளி அங்கி மற்றும் வெள்ளி வேல் சாத்தும்விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு .ஜெ. ஜெயகாந்தன் ,அவரது தந்தை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்தறை துணை இயக்குனர் விஜயராகவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயகாந்தன் மற்றும் சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இவ்விழாவை சிறப்பித்து வைத்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon