--- --:--:-- --

24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு… அமெரிக்கா, பிரேசிலை முந்தி இந்தியா “டாப்”!!

24

உலக அளவில் 24 நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முதன் முறையாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. படுவேகமெடுத்து முதல் இரண்டு இடத்தில் இருந்து வந்த அமெரிக்காவிலும், பிரேசிலிலும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

 

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,82,26,892 ஆகவும், மொத்த உயிரிழப்பு 6,92,434 எனவும் உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்கா ( பாதிப்பு 48,13,647 ; உயிரிழப்பு 1,58,365) முதலிடத்திலும், பிரேசில் ( பாதிப்பு 27, 33,677 ; உயிரிழப்பு 94,430) இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் 18,04,702 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் பாதிப்பு பட்டியலில் 3-வது இடத்திலும், 38,161 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பில் 5-வது இடத்திலும் உள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் 50% அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இதில், தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்காவும், பிரேசிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போட்டி போட்டு முன்னேறி வந்தன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த இரு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. அதே வேளையில் இந்தியாவில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் தொற்று பாதிப்பு 52,783 ஆகவும், உயிரிழப்பு 758 ஆகவும் பதிவாகி, முதன் முறையாக அமெரிக்காவையும், பிரேசிலையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

 

அமெரிக்காவில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 49038 ஆகவும், உயிரிழப்பு 467 எனவும் குறைந்துள்ளது. பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 24801 மற்றும் உயிரிழப்பு 514 மட்டுமே என குறைந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 138 கோடி மக்கள் தொகையுடன் உலக ஜனத்தொகையில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியாவில் கொரோனா பரவல் இப்போது படு ஸ்பீடாக உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மேலும் உச்சத்திற்கு செல்லும் என்றே அஞ்சப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon