முழு முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!
முழு முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தும் நிலையில் தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரொனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் மேலான கொரொனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






