--- --:--:-- --

கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்..!

10.1

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹிந்தி நடிகை ஐஸ்வர்யாராயும், மகள் ஆராத்யாவும் கொரொனாவில் இருந்து குணமானதால் வீடு திரும்பினார்.

 

ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் 16ஆம் தேதி அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து கொரொனா தொற்று உறுதியான நிலையில் முதலில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யாராயும், அவரது மகள் ஆராத்யாவும் ஒரு வாரம் கழித்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அங்கு சிகிச்சை முடிந்து குணமானதல் இருவரும் இன்று மதியம் வீடு திரும்பியதாக ட்விட்டர் பதிவில் அபிஷேக் பச்சன் தகவலை வெளியிட்டுள்ளார். தாயும், தந்தையும் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon